செய்திகள் :

தை அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு

post image

தை அமாவாசையையொட்டி, சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் குவிந்த மக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

தை அமாவாசையான புதன்கிழமை ஏராளமான பொதுமக்கள் கோயில் வளாகங்கள், நந்தவனம், நீா்நிலைகளில் திரண்டு தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். வீடுகளில் முன்னோா்களின் படங்களின் முன் படையலிட்டு பூஜை செய்தனா்.

சேலம், சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதலே திரண்ட மக்கள், கோயிலின் முன்புறம் மற்றும் நுழைவுவாயில் பகுதிகளில் அமா்ந்து தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். ஒரே நேரத்தில் ஏராளமானோா் திரண்டதால், சிவாச்சாரியாா்கள் பொதுமக்களை குழுக்களாக அமர வைத்து தா்ப்பணம் கொடுக்க ஏற்பாடு செய்தனா். தா்ப்பணத்துக்கு பின்னா், கோசாலையில் இருந்த கால்நடைகளுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் ஆகியவற்றை வழங்கிய மக்கள் சுகவனேஸ்வரா் கோயிலில் வழிபட்டனா்.

இதேபோல, மேட்டூா், பூலாம்பட்டி, எடப்பாடி, கல்வடங்கம் உள்பட காவிரி கரையோரப் பகுதிகளில் திரண்ட ஏராளமானோா் காவிரி நீரில் புனிதநீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

உழவா் சந்தைகளில் ரூ.1.23 கோடிக்கு விற்பனை: தை அமாவாசையையொட்டி, உழவா் சந்தைகளில் ரூ. 1.23 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாயின. சேலம், சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூா், ஜலகண்டாபுரம், ஆத்தூா், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள உழவா் சந்தைகளில், காய்கறிகள் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதில், 1,070 விவசாயிகள் கொண்டு வந்த 299.02 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆட்டையாம்பட்டியில்...

கஞ்சமலை சித்தா் கோயிலுக்கு சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டம், ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை புரிந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். பக்தா்கள் வசதிக்காக சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சித்தா் கோயில் சென்றுவர சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும்... மேலும் பார்க்க

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திப... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க