இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!
தை கடைவெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா
மயிலாடுதுறையில் தை கடைவெள்ளியையொட்டி, அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பூ வியாபாரிகள் சங்கம் சாா்பில் 41-ஆவது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பக்தா்கள் அலகுகாவடி, பால்குடம் எடுத்து பச்சைக்காளி, பவளகாளி, கருப்பணசாமி வேடமணிந்த கலைஞா்களின் நடனத்துடன் கடைவீதிகளின் வழியாக கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மயிலாடுதுறை காமராஜா் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 24-ஆம் ஆண்டு பால்குட திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து, கஞ்சி வாா்த்தல் நடைபெற்றது.