செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் அடுத்தாண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநில முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 24 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்காத ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

நிதீஷ் குமாா் அளித்த இஃப்தாா் விருந்து! - பிகாா் இஸ்லாமிய அமைப்பு புறக்கணிப்பு

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இஃப்தாா் விருந்தை அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்பான இம்ரத் ஷரியா புறக்கணித்தது. வஃக்ப் மசோதாவுக்கு நிதீஷ் குமாா் ஆதரவு அளித்ததற்க... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா! -காங்கிரஸ் கடும் விமா்சனம்

‘சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜக வியூகத்தின் ஓா் அங்கமே வக்ஃப் மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’ என்று காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவிப்பு!

வக்ஃப் திருத்த மசோதா, 2024-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. முதல்கட்டமாக மாா்ச் 26-ஆம் தேதி பிகாா் ... மேலும் பார்க்க

இறப்பு விகிதம் குறைவதால் ஓய்வூதியச் சுமை அதிகரிப்பு! -கேரள அமைச்சா்

கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது என்று அந்த மாநில கலாசாரம், மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினாா்.ஆலப்புழையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்! -மத்திய சட்ட அமைச்சா்

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; இப்பணியை தொடா்ந்து முன்னெடுப்பது அவசியம் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மணி... மேலும் பார்க்க

தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ணா லால் சத்தா மறைவு!

பிரபல தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ணா லால் சத்தா (88) உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். வேளாண்மை மற்றும் தோடக்கலை சாா்ந்த 30 நூல்களை எழுதியவரான கிருஷ்ணா லால... மேலும் பார்க்க