செய்திகள் :

தொடர்ச்சியாக மூன்றாவது கோப்பையை வென்ற ஓவல் அணி!

post image

தி ஹன்ட்ரெட் தொடரை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஓவல் இன்வின்சிபிலஸ் அணி வென்று சாதனை படைத்துள்ளது.

சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் அணி இறுதிப் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தியது.

இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தி ஹன்ட்ரெட் எனும் பெயரில் 2021 முதல் நடைபெற்று வருகின்றன.

இந்த சீசனில் ஆரவர் தி ஹன்ட்ரெட் இறுதிப் போட்டியில் டேவிட் வில்லி தலைமையிலான டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியும் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்வின்சிபிலஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓவல் அணி 100 பந்துகளில் 168/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 72, ஜோர்டான் காக்ஸ் 40 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய டிரெண்ட் அணி 142/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 64 ரன்கள் எடுத்தார்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தக் கோப்பையை ஓவல் அணி வென்று அசத்தியுள்ளது.

The Oval Invincibles have set a record by winning The Hundred Series for the third consecutive time.

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிகிதத்தின் எதிரொலியால் ஐபிஎல் டிக்கெட்டின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நேற்று(செப். 3) நடைபெற்ற ... மேலும் பார்க்க

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அனைத்துவிதமாக கிரிக்கெட் ... மேலும் பார்க்க

கமிந்து மெண்டிஸ் அதிரடி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருக... மேலும் பார்க்க

முதல் டி20: பிரையன் பென்னட் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களி... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடருக்காக ரிஸ்க் எடுக்கத் தயார்: பாட் கம்மின்ஸ்

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேய... மேலும் பார்க்க

அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

சிஎஸ்கேவிலிருந்து விலகிய ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் விளையாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் இருந்து அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க