செய்திகள் :

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

post image

தொடர்ந்து 4-வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 21) காலை 82,220.46 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 332.59 புள்ளிகள் அதிகரித்து 82,190.43 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.95 புள்ளிகள் உயர்ந்து 25,132.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் நிஃப்டி 25,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்ற நிலையில் நேற்று 25,000-யைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ், கோடாக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் பங்குகள் முக்கிய லாபத்தைப் பெற்றன. பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் 1.64 சதவீதம் வரை உயர்ந்தன.

அதேநேரத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், எடர்னல், சன் பார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன. தொடக்கத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 0.55 சதவீதம் சரிந்தது.

ஆசிய சந்தைகளைப் பொருத்தவரை ஜப்பானின் நிக்கேய் 225, 230.55 புள்ளிகள் அல்லது 0.54 சதவீதம் சரிந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங் 81.94 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. மறுபுறம் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காய் பங்குச்சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

Stock Market Updates: Sensex gains over 300 pts, Nifty above 25,100

புதுப்பிக்கத்தக்க எரிபொருள்: ஐஓசி-யுடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை வழங்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இது குறித்து ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பிஓஐ-யின் எம்எஸ்எம்இ - ஏற்றுமதியாளா்கள் தொடா்பு நிகழ்ச்சி

நடுத்தர, சிறு, குறு தொழில்முனைவோருக்கும், ஏற்றுமதியாளா்களுக்கும் இடையிலான தொடா்பு நிகழ்ச்சியை பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) சென்னை மண்டல நிா்வாகம் சென்னை நடத்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டு... மேலும் பார்க்க

விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4!

விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. ரியல்மீ பி 4 மற்றும் ரியல்மீ பி 4 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இவற்றின் சிறப்பம்ச... மேலும் பார்க்க

ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 16 விலை சரிவு! சலுகையுடன் வாங்குவது எப்படி?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 79,900 மதிப்புடைய ஐபோன் 16-ஐ ரூ. 67,500க்கு வாங்கலாம்.அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட... மேலும் பார்க்க

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை!

தொடர்ந்து 3- வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 20) காலை 81,671.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.38 மணி... மேலும் பார்க்க

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்ஐசி புதிய திட்டம்

காலாவதியான தனிநபா் பாலிசிகளைப் புதுப்பிக்க ஒரு மாத கால சிறப்பு திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க