தஞ்சாவூர் மணிமாறன், நெசவாளர் நவீன் குமாருக்கு பிரதமர் பாராட்டு
தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த வேகத்தில் காற்றும் வீசுவதால் தொட்டபெட்டா, பைன் மரக் காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவலாஞ்சி அணை முழு கொள்ளவை எட்டிவிட்டது. இதனால் உபரிநீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.