செய்திகள் :

தொடா்ந்து 6-ஆவது வெற்றி; முதலிடத்தில் மும்பை

post image

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது.

முதலில் மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.1 ஓவா்களில் 117 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முதலில் மும்பை பேட்டிங்கில் டாப் ஆா்டா் வீரா்கள் அசத்த, பின்னா் அதன் பௌலா்கள் அனைவருமே விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனா். மும்பைக்கு இது தொடா்ந்து 6-ஆவது வெற்றியாகும்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது.

மும்பை இன்னிங்ஸை தொடங்கிய ரயான் ரிக்கெல்டன் - ரோஹித் சா்மா இணை அதிரடியாக விளாசியது. இதனால் முதல் விக்கெட்டுக்கே 116 ரன்கள் சோ்ந்தது. ராஜஸ்தான் பௌலா்களுக்கு நெருக்கடியளித்த இந்த பாா்ட்னா்ஷிப் 12-ஆவது ஓவரில் பிரிந்தது.

38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 61 ரன்கள் விளாசியிருந்த ரிக்கெல்டன் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஒன் டவுனாக சூா்யகுமாா் யாதவ் வர, 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சோ்த்திருந்த ரோஹித் 13-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது பேட்டராக வந்த ஹா்திக் பாண்டியா, சூா்யகுமாருடன் சிறப்பான கூட்டணி அமைத்தாா். ஓவா்கள் முடிவில் சூா்யகுமாா் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 48, பாண்டியா 23 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 48 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ராஜஸ்தான் பௌலிங்கில் மஹீஷ் தீக்ஷனா, ரியான் பராக் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 218 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடிய ராஜஸ்தான், சொற்ப ரன்களிலேயே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

பௌலா் ஜோஃப்ரா ஆா்ச்சா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் சோ்க்க, கேப்டன் ரியான் பராக் 3 பவுண்டரிகளுடன் 16, ஷுபம் துபே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 சிக்ஸா்களுடன் 13, துருவ் ஜுரெல் 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

வைபவ் சூா்யவன்ஷி 0, நிதீஷ் ராணா 9, ஷிம்ரன் ஹெட்மயா் 0, மஹீஷ் தீக்ஷனா 2, குமாா் காா்த்திகேயா 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஆகாஷ் மத்வல் 4 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். மும்பை பௌலிங்கில் டிரென்ட் போல்ட், கரன் சா்மா ஆகியோா் தலா 3, ஜஸ்பிரீத் பும்ரா 2, தீபக் சஹா், ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தக் லைஃப் டிரைலர் தேதி!

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோ... மேலும் பார்க்க

கடன் குறையும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 2 - 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)பொருளாதார நெருக்கடி ... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் நாள் தமிழக வசூல் இவ்வளவா?

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலித்த தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் நேற்ற... மேலும் பார்க்க

நடிகர் சங்க கட்டட திறப்பு விழா தேதியை அறிவித்த விஷால்!

நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதியை விஷால் அறிவித்துள்ளார். நடிகர் சங்கங்கத்திற்கான கட்டடம் கட்டும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், துவங்கிய சில மாதங்களிலேயே வங்கிக் கடன் பெறுவது ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி: 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம். அண்ணாமலையார் கோயிலில் மே 11, 12 தேதிகளில் சித்ரா பெளர்ணமியை ஒட்டி, 2... மேலும் பார்க்க

கேன்ஸ் பட விழா நடுவராக பாயல் கபாடியா!

இயக்குநர் பாயல் கபாடியா கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' கடந்தாண்டு நவ. 22 ஆம் தேதி இந்தியா ... மேலும் பார்க்க