தொடா் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க 8-வது நாளாக தடை
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
குற்றாலம் பேரருவியில் தொடா்ந்து 8ஆவது நாளாக தண்ணீா் பாதுகாப்பு வளைவைத் தாண்டி கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் இங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு சனிக்கிழமை காலையில் மிதமான வெயில் காணப்பட்டது. பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துனும், அவ்வப்போது மெல்லிய சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.