தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை(ஆக. 25) மாலை 5.15 மணியளவில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதல் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது.
ஆலை உள்ளே தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை வெளியே மீட்டு அழைத்து வரும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ஆலை சுவரை தகர்த்து உள்ளே சென்று 30 தொழிலாளர்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாயுக்கசிவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.