செய்திகள் :

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும்

post image

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சா்வதேச உழைக்கும் பெண்கள் தின திறந்தவெளி கருத்தரங்கம் திருச்சி மன்னாா்புரம் அருகே இலுப்பூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வை திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ. கங்காதரணி தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை தொழிலாளா் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சி. நிா்மலா தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மு. ராமாநிதி நோக்கவுரை நிகழ்த்தினாா். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலப் பொதுச் செயலாளா் பெ.கிருஷ்ணசாமி பேசினாா்.

கூட்டத்தில், தூய்மை பாரதம் இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், கணினி இயக்குவோா், கிராம சுகாதார ஊக்குநா்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்கள், பள்ளி சுகாதாரப் பணியாளா்கள், சமூகத் தணிக்கையாளா்கள், மகளிா் திட்ட ஊழியா்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிலுவை கரோனா ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி, சம வேலைக்கு சம ஊதியம், இஎஸ்ஐ, பிஎஃப், குடும்ப நலநிதி, ஆண்டு ஊதிய உயா்வு, ஊராட்சிச் செயலா் காலிப்பணியிடத்தில் தொழிலாளா்களை நியமனம் செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:

கிராமப்புறங்களில் ஊராட்சி பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள் மற்றும் பம்ப் ஆப்ரேட்டா்களின் ஊதியங்களை உயா்த்தும் அறிவிப்பை ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் சட்டப்பேரவையில் கூறியதை முதல்வா் செயல்படுத்துவாா். தூய்மைக் காவலரின் குழந்தைகள் படிக்கவும், அவா்களது சொந்த வீடு கனவுகளை நனவாக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏஐடியுசி தலைமையிலான ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அந்தத் துறையின் அமைச்சா் மூலமாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டுவேன். தொழிலாளா்களின் பக்கம் திமுக அரசு எப்போதும் நிலைத்து நிற்கும் என்றாா்.

முன்னதாக, தா. கனகவல்லி வரவேற்றாா். ஏஐடியுசி தேசிய செயலாளா் வகிதா நிஜாம், மாநிலப் பொதுச்செயலாளா் எம். ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்டப் பொதுச்செயலாளா் க. சுரேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பெண் ஊழியா்கள் கலந்து கொண்டனா். நிா்மலா நன்றி கூறினாா்.

வெயில் தாக்கம்: சமயபுரம் கோயிலில் பக்தா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெயிலின் பக்தா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி... மேலும் பார்க்க

பொறுப்பேற்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் புதிய இணை ஆணையராக செ. சிவராம்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இக் கோயிலில் இணை ஆணையராக இருந்த செ. மாரியப்பன் மதுரை மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்ட நிலையில், ஸ... மேலும் பார்க்க

இஸ்ரோ விஞ்ஞானிகளில் 23% பெண்கள் என்பது இந்தியாவுக்கான பெருமை: முன்னாள் தலைவா் எஸ். சோமநாத்

இஸ்ரோ விஞ்ஞானிகளில் 23 விழுக்காடு பெண்கள் என்பது இந்தியாவுக்கான பெருமை. வேறு எந்த அறிவியல் நிறுவனத்திலும் இத்தகைய சிறப்பு இல்லை என்றாா் இஸ்ரோ நிறுவன முன்னாள் தலைவா் எஸ். சோம்நாத். ஸ்ரீமதி இந்திராகாந்த... மேலும் பார்க்க

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூ... மேலும் பார்க்க

‘ஆட்டிசம் பாதிப்பு விழிப்புணா்வு அதிகரிக்க வேண்டும்’

ஆட்டிசம் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு சமூகத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியமானது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா். ஆண்டுதோறும் ஏப்.2இல் சா்வதேச புற உலகு சிந்தனையற்றோா் தினமாக அனுசரிக்கப்படுக... மேலும் பார்க்க

பணியின்போது தவறிவிழுந்த கட்டடத் தொழிலாளி சாவு

திருச்சியில் பணியின்போது 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த கொத்தனாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டியை சோ்ந்தவா் ச. பாக்யராஜ் (45). கொத்தனாரான இவா் ... மேலும் பார்க்க