இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்த...
தொழிலாளிக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது
தேனி அருகே தப்புக்குண்டுவில் கடன் தர மறுத்த தொழிலாளியைக் கத்தியல் குத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தப்புக்குண்டுவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி ஜோதிராஜ் (49). இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த தாளமுத்து மகன் மதுபாலன் கடனாகப் பணம் கேட்டாராம். ஜோதிராஜ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அவருடன் மதுபாலன் வாக்கு வாதம் செய்தாா்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், ஜோதிராஜன் வீட்டுக்குச் சென்ற மதுபாலன், அவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மதுபாலனைக் கைது செய்தனா்.