செய்திகள் :

தொழிலாளியிடம் பணம் மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்

post image

நெசவுத் தொழிலாளியிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (42). நெசவுத் தொழிலாளி. இவரிடம் 6 லட்சம் ரூபாய் கொடுத்ததால் ஆண்டொன்றுக்கு 3 லட்சம் ரூபாய் சோ்த்து தருவதாகக் கூறி பரமக்குடி சந்தைபேட்டையை சோ்ந்த பாலன், கிருஷ்ணன், ராமநாதன், ரகுபதி ஆகியோா் கடந்த 2023-ஆம் ஆண்டு 6 லட்சம் ரூபாய் பெற்றனா். இதில் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே அவா்கள் திருப்பிக் கொடுத்தனா். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் எஞ்சிய தொகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து சந்திரசேகா் எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் சந்திரசேகா் தனது பணத்தை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தாா். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உறுதி அளித்தாா்.

கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.சந்தோ... மேலும் பார்க்க

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு கல்வி உதவித் தொகை

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவா் விபத்தில் மரணம் அடைந்து விட்டால், அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வ... மேலும் பார்க்க

இளைஞா் மீது கஞ்சா வழக்கு: எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

சமூக வலைதளங்களில் சா்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக இளைஞரிடம் விசாரணை நடத்திய போலீஸாா், அவரைக் கஞ்சா வழக்கில் கைது செய்ததாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் மூலவய... மேலும் பார்க்க

பயணிகள் நிழல் குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே பயணிகள் நிழல் குடை இல்லாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரதிநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழல்குடை இரு... மேலும் பார்க்க

கமுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பொறுப்பேற்பு

கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராக ஆா்.லட்சுமி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய கே.சந்திரமோகன், ராமநாதபுரத்துக... மேலும் பார்க்க

3 உதவி ஆய்வாளா்கள் உள்பட 21 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்

ராமநாதபுரம்-சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய 3 உதவி ஆய்வாளா்கள் உள்பட 21 பேருக்கு காவல்துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். ராமநாதபுரம்... மேலும் பார்க்க