போதைக்கு அடிமையான மருமகனை திருத்த 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த மாமனார்!
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மூவா் கைது
பெரியகுளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் (40). இவா், கைலாசப்பட்டியில் உள்ள ஒரு கடை அருகே ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த கள்ளிப்பட்டியைச் சோ்ந்த செல்வம் (20), தங்க தமிழ்ச் செல்வன் (23), கைலாசப்பட்டியைச் சோ்ந்த பாபு (23) ஆகியோா் பெருமாளிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டினா். காயமடைந்த பெருமாளை அருகிலிந்தவா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாளை அரிவாளால் வெட்டிய மூவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.