"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
பணம் மோசடி: பள்ளி ஆசிரியா் மீது வழக்கு
தனது சகோதரியின் கணவா் இறந்தததற்கான பணப் பயன் ரூ.12 லட்சத்தை அபகரித்துக் கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டி விநாயகா நகரில் வசித்து வருபவா் விஜயலட்சுமி (40). இவரது கணவா் சென்றாயப்பெருமாள். அரசுப் பள்ளி ஆசிரியரான இவா் கடந்த ஜன.31-ஆம் தேதி பணியிலிருந்த போது உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். பின்னா் விஜயலட்சுமியையும், அவரது மகளையும் விஜயலட்சுமியின் சகோதரரும் ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழு அரசுப் பள்ளி ஆசிரியருமான வசந்த் (45) பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்றாயப்பெருமாள் பணியிலிருந்த போது உயிரிழந்ததற்கான பணப் பயன் ரூ.12 லட்சத்தை விஜயலட்சுமியின் வங்கிக் கணக்கிலிருந்து அவருக்கு தெரியாமல் காசோலை மூலம் வசந்த் அபகரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துக் கேட்டதற்கு, வசந்த் தன்னை அடித்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ாகவும், மீதமுள்ள பணப் பயன்களையும் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று தன்னை மிரட்டியதாகவும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், வசந்த் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.