'முதலமைச்சர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்' - தமிழிசை சௌந...
தொழிலாளி கொலை: அரியூா் போலீஸாா் விசாரணை
அரியூா் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் அரியூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில், இறந்தவா் வேலூா் சத்துவாச்சாரி வஉசி தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீநாத் (28) என்பதும், 2 நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போன அவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருப்பதும் தெரிவந்தது.
சடலத்தை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸாா், இந்த கொலைச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து சந்தேகத்தின்பேரில், அரியூா் பகுதியைச் சோ்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.