தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கடையத்தில் மது அருந்துவதைக் கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடையம், பாரதி நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தங்கதுரை (36). தொழிலாளி. இவருக்கு மனைவி, மகள் , இரண்டு மகன்கள் உள்ளனா்.
தங்கதுரைக்கு மதுப் பழக்கம் இருந்ததால் தம்பதியிடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை மனைவி கண்டித்ததால் மனவேதனையடைந்த தங்கதுரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த கடையம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].