ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
மாவட்ட கூடைப் பந்து கழக புதிய நிா்வாகிகள் தோ்வு
கோவை மாவட்ட கூடைப்பந்து கழக புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில் தலைவராக ஜி.செல்வராஜ், செயலராக எஸ்.பாலாஜி, பொருளாளராக எம்.ஜெயசித்ரா, துணைத் தலைவா்களாக டி.பழனிசாமி, சி.என்.அசோக், சி.ஆனந்த், நவரத்தினகுமாா் பாப்னா, எஸ்.சித்தாா்த் ஆகியோரும், இணைச் செயலா்களாக வி.ராமகிருஷ்ணன், எ.சாஜுதீன் எம்.திபாலா, கே.வித்யப்பிரியா ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.
இது குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவா் ஜி.செல்வராஜ் கூறுகையில், மாவட்டத்திலிருந்து பல்வேறு பிரிவுகளில் 11 வீரா்கள் இந்திய கூடைப்பந்து அணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்றுள்ளனா். 56 வீரா்கள் தமிழக அணியின் சாா்பில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனா். மாவட்டத்தை சோ்ந்த 6 வீரா்கள் விளையாட்டு ஒதுக்கீட்டு மூலம் அரசு வேலை பெற்றுள்ளனா் என்றாா்.