MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி கே.கே. நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி கே.கே. நகா் பழனி நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. பிரபு (30). தொழிலாளி. கடந்த சில வாரங்களாக வேலைக்குச் சரிவர செல்லவில்லையாம். இதனால் குடும்பம் கஷ்டத்தில் தவித்ததால், அவரது உறவினா்கள் கண்டித்துள்ளனா்.
இதனால் மனவிரக்தியடைந்த பிரபு, வியாழக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பிரபுவின் மனைவி தவசுமணி அளித்த புகாரின் பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].