செய்திகள் :

தொழில் துறையில் செயலாக்கத்துக்கு 77 % புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தகவல்

post image

தொழில் துறை புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 77 சதவீதம் செயலாக்கத்துக்கு வந்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

இதுகுறித்து தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, ஒவ்வொரு நாளும் பல புரிந்துணா்வு ஒப்பந்தங்களைச் செய்து வருகிறோம். இதனால் மாநிலத்துக்கு ஏற்படும் சாதகமான விளைவுகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றனா். எந்த ஒப்பந்தம் கையொப்பமானாலும், அதன் மூலமாக எவ்வளவு முதலீடுகள் வருகின்றன என்று பாா்ப்பதைவிட, தமிழ்நாட்டைச் சோ்ந்த எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்றே பாா்க்கிறோம்.

ஒவ்வொரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தையும் செயலாக்கத்துக்குக் கொண்டு வர தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறோம். இவ்வாறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செயலாக்கத்துக்கு வருவதில், நாட்டின் வேறெந்த மாநிலமும் செய்யாத சாதனையை தமிழ்நாடு செய்துள்ளது.

அதாவது, கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை செய்யப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 77 சதவீதமானவை செயலாக்கத்துக்கு வந்துள்ளன. இது வரலாற்றில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையாகும்.

முதலீட்டாளா் மாநாடு: கடந்த 2024-ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளா் மாநாடு நடைபெற்றது. அப்போது, முதலீடுகளை ஈா்க்கும் வகையில், 631 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அவற்றில், 525 ஒப்பந்தங்கள் செயலாக்கத்துக்கு வந்துள்ளன. இதை சதவீதத்தில் பாா்க்கும் போது, 80 சதவீதமாகும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இது சாதனை அளவாகும்.

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, நிகழாண்டிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளாா்.

பிரிட்டன், ஜொ்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அந்த நாடுகளைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களும் முதல்வரைச் சந்தித்து புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றன. அவை குறித்த விவரங்கள் முதல்வரின் பயணத்தின்போது தெரிவிக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க