தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தொழுநோய் கண்டறிதல் பயிற்சி முகாம்
புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் மீனாட்சிதேவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மருத்துவப்பணிகள் துணை இயக்குநா் பிரீத்தா (தொழுநோய்) கலந்து கொண்டு தொழுநோய் கண்டறிதல் குறித்து பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தாா்.
மாவட்ட நலக்கல்வியாளா் நாராயணன், மருத்துவா்கள் புகழேந்தி, பிரதீப் ராஜ் மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் முத்துக்கிருஷ்ணன், மாதையன், மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்