செய்திகள் :

தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்

post image

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவர் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.

தோனி கடைசியாக 2023இல் கேப்டனாக இருக்கும்போது சிஎஸ்கே அணி தனது 5-ஆவது கோப்பையை வென்றது.

ருதுராஜ் தலைமையில் 2024-இல் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடியது. இந்த சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக விலகவே தோனி மீண்டும் கேப்டனானார்.

தோனி கேப்டனாகியும் சிஎஸ்கேவின் தோல்விப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஆஸி. விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்டருமான கில் கிறிஸ்ட் கூறியதாவது:

கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவருக்கு என்னச் செய்ய வேண்டும் எனத் தெரியும். ஆனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் அவர் விளையாடக் கூடாது.

நான் உங்களை நேசிக்கிறேன் எம்.எஸ்.தோனி. நீங்கள் ஒரு சாம்பியன், ஒரு அடையாள சின்னம் எனக் கூறினார்.

பேட்டர்கள் சொதப்ப அணியில் பல மாற்றங்களை தோனி கொண்டு வந்துள்ளார். தற்போதுதான், ஓரளவுக்கு சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனை கண்டறிந்துள்ளார்கள்.

டாஸின்போது தோனி நான் அடுத்த போட்டியில் விளையாடுவானா என்றே தெரியாது, இதில் அடுத்த சீசனில் எப்படி என சிரித்துக்கொண்டே பேசியதும் கவனிக்கத்தக்கது.

அரைசதம் விளாசிய ரோஹித், ரிக்கல்டான்; ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (மே 2) நடைபெறும் போட்டியில் குஜராத... மேலும் பார்க்க

50-வது போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் இன்று நடைபெறும் 50-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று... மேலும் பார்க்க

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அவரது பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சிளார் எரிக் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொ... மேலும் பார்க்க