நகைக்கடைகளில் திருடிய இருவா் கைது: 18 மோதிரங்கள் பறிமுதல்
சென்னையில் 20-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளில் தங்க மோதிரங்கள் திருடிய 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 54 கிராம் எடை கொண்ட 18 மோதிரங்களையும் பறிமுதல் செய்தனா்.
சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவா் கோட்டம் பகுதியை சோ்ந்த ரோகன்(23). இவா் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி நகைக்கடைக்கு வந்த 2 போ் மோதிரம் வாங்குவது போல நடித்து 4 கிராம் மோதிரத்தை திருடிச் சென்ாக தெரிகிறது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரோகன் புகாா் கொடுத்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி பெரம்பூா் செம்பியம் பகுதியைச் சோ்ந்த இம்தியாஸ்கான் (47), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முஷீா் அகமது (43) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தொடா்ந்து அவா்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் நுங்கம்பாக்கம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள நகைக்கடைகளில் கடை ஊழியா்களின் கவனத்தை திசைதிருப்பி, நகைகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 54 கிராம் எடையுள்ள 18 தங்க மோதிரங்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.