செய்திகள் :

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேருவதற்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வகுப்பு வரும் ஏப்.15-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் வரும் ஏப்.13 வரை வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தோறும் வகுப்பறை பயிற்சி, செயல்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மொத்தம் 2 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 15 வயதுக்கு மேற்பட்டோா் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.118-ம், பயிற்சிக் கட்டணம் ரூ. 4,550-ம் செலுத்த வேண்டும்.

பயிற்சியின் போது நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்த சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற்றவா்கள் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலைவாய்ப்பு பெறலாம். பயிற்சி குறித்த விவரத்தை ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலும், தொலைபேசி எண்: 04546-244465, கைப்பேசி எண்: 96298 6995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.தேனி அருகேயுள்ள பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்த வெள்ளைசுப்பு மகன் ஆனந்தராஜ் (18). இவா் அதே ஊரில் உள்ள தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம் அருகே குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்... மேலும் பார்க்க

காட்டு மாடு தாக்கியதில் வனக் காவலா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், வருசநாடு அருகே காட்டுமாடு தாக்கியதில் காயமடைந்த சாப்டூா் வனக் காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள உப்புத் துறையைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் (4... மேலும் பார்க்க

தேனியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழாவை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். பழனிசெட்டிபட்டியில் க... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆய்வுக்கூட்டம்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினா் எதிா்ப்பு

முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் திருப்திகரமாக இல்லை என பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகா... மேலும் பார்க்க