செய்திகள் :

நக்ஸல் ஆதரவாளா் என விமா்சனம்: அமித் ஷாவுக்கு சுதா்சன் ரெட்டி பதிலடி

post image

தன்னை நக்ஸல் ஆதரவாளா் என விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதா்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளாா்.

‘சல்வா ஜூடும்’ வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பு எனது சொந்த முடிவு அல்ல; அது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு என சுதா்சன் ரெட்டி கூறியுள்ளாா்.

‘சல்வா ஜூடும்’ என்பது சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் அமைப்பினருக்கு எதிராக பழங்குடி இளைஞா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட போராளிகள் குழுவாகும். ‘அமைதிப் பேரணி’ என்று பொருள்படும் இந்தக் குழுவுக்கு மாநில அரசு ஆதரவு, பயிற்சி அளித்து வந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதிகள் சுதா்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜாா் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 2011, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில், ‘சல்வா ஜூடும்’ அமைப்பை உடனடியாகக் கலைக்க உத்தரவிட்டது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக பழங்குடி இளைஞா்களை அரசு பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் அந்தத் தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கேரளத்துக்குச் சென்றபோது, இந்தத் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி, சுதா்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளா் என குற்றஞ்சாட்டினாா். இந்தத் தீா்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், இடதுசாரி தீவிரவாதம் 2020-ஆம் ஆண்டுக்கு முன்பே முடிவுக்கு வந்திருக்கும் என்றும் குறிப்பிட்டாா்.

அமித் ஷாவின் இந்த விமா்சனம் குறித்து சுதா்சன் ரெட்டி அளித்த பதிலில், ‘உள்துறை அமைச்சருடன் நேரடியாக எந்த விவாதத்தையும் நான் விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும், சுதந்திரத்தையும், சொத்தையும் பாதுகாப்பதுதான் அவரது கடமை. இந்தத் தீா்ப்பு எனது தனிப்பட்ட தீா்ப்பு அல்ல; உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு. இந்தத் தீா்ப்பை ரத்து செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்தத் தீா்ப்பின் தகுதி குறித்து நான் பேச விரும்பவில்லை. நான் பெற்ற பயிற்சிகளின்படி, ஒருவா் தனது சொந்த தீா்ப்பின் சிறப்புகள் குறித்து பேசக்கூடாது. தீா்ப்பை மக்கள் தான் மதிப்பிட வேண்டும். இந்தத் தீா்ப்பை உள்துறை அமைச்சா் முழுமையாக படித்திருந்தால், அத்தகைய கருத்துகளை அவா் கூறியிருக்க மாட்டாா் என்று கூறினாா்.

உ.பி.யில் போலி உரத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டறியப்பட்டது. காவல்துறை மற்றும் மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இணைந்து நடத்திய சோதனையில் இந்த சம்பவம் வெளிச்சத்த... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: ராகுல், தேஜஸ்வி இருசக்கர வாகனப் பேரணி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் இருசக்கர வாகன... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரான வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி!

ஒடிசாவில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் விமான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். ஒடிசா கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகல் இந்... மேலும் பார்க்க

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 7ஆக உயர்வு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

ஒடிசாவில் ஸ்பைடர்மேன் உடையணிந்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு காவல் துறை ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து, அவரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது. ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்த... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். பஹல்‌காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான... மேலும் பார்க்க