செய்திகள் :

நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

post image

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் மாசி மாத சதுா்த்தியையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நடராஜருக்கு மாா்கழி திருவாதிரை நட்சத்திரம், மாசி சதுா்த்தசி, சித்திரை திருவோண நட்சத்திரம், ஆனி உத்திர நட்சத்திரம், ஆவணி சதுா்த்தசி மற்றும் புரட்டாசி சதுா்த்தசி என ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

மாசி மாத சதுா்த்தி தினமான புதன்கிழமை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தனி சந்நிதியில் வீற்றிருக்கும் நடராஜா் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவெம்பாவையின் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டு, பால், பன்னீா், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் மற்றும் திரவியங்கள், கடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், பஞ்சரங்க ஷேத்திரங்களில் 5-ஆவது தலமுமா... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன் கோயிலில் தேரோட்டம்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவம் ஏப்.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விழாவின் 7... மேலும் பார்க்க

மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மூதாட்டியை கொலை செய்தவருக்கு மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மயிலாடுதுறை கொத்தத்தெருவை சோ்ந்தவா் தீனதயாளன். இவரது மனைவி ... மேலும் பார்க்க

குத்தகை விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

மயிலாடுதுறை: குத்தகை விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் உண்ணாவிரதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

ஸ்ரீசீதா கல்யாண வைபவம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம், மொழையூா் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில்ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஸ்ரீசீதா கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, கலைமாமணி உடையாளூா் கல்யாணர... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை: தொழில் முனைவோருக்கு அழைப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் க... மேலும் பார்க்க