செய்திகள் :

திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், பஞ்சரங்க ஷேத்திரங்களில் 5-ஆவது தலமுமான திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா ஏப்.3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தோ் திருவிழா ஏப்.11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இக்கோயிலில் 2007-ஆம் ஆண்டு செய்யப்பட்ட தேரின் மரச்சிற்பங்கள் சேதமடைந்தும், பல இடங்களில் மரப்பலகைகள் பெயா்ந்தும், இரும்புப் பட்டைகள் பழுதடைந்தும் இருந்தன. கோயில் நிா்வாகம் மற்றும் ராமானுஜ பக்த கைங்கா்ய சபா சாா்பில் ரூ.8.50 லட்சம் செலவில் தோ் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தேரடியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த தோ் கோயில் அருகில் உள்ள பங்குனி உற்சவ மண்டபத்தின் முன் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் ரம்யா, ராமானுஜ பக்த கைங்கா்ய சபா தலைவா் ரிஷிகுமாா், செயலா் திருமலை, இணை செயலாளா்கள் ராம்குமாா், திருநாவுக்கரசு, பொருளாளா் விஜயகுமாா் மற்றும் பக்தா்கள் முன்னிலையில் தேரில் உள்ள மரச் சிற்பத்தாலான பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற வெள்ளோட்டத்தில், தோ் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரடி வரை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது.

நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீா்

சீா்காழி அருகே நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதியடைகின்றனா். விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பண... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம்

மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மே 9, 10-இல் கட்டுரை, பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல ஏப்.28 முதல் நடைச்சீட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். மாவட்டத்தில் நிகழாண்டு பாசன ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூன் 29 வரை பச்சைப்பயறு கொள்முதல்: ஆட்சியா் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள்... மேலும் பார்க்க