செய்திகள் :

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு; போலீஸ் விசாரணை!

post image

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. இவர் விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் ``கடந்த அக்டோபர் 31-ம் தேதி, என்னுடைய தம்பியின் மனைவி கல்பனா, நிகழ்ச்சிக்கு ஒன்று சென்றுவிட்டு என்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது அவர், அணிந்திருந்த 4 1/2 சவரன் ஜிமிக்கி, செயின் உள்ளிட்ட நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு தூங்கினார்.

நடிகை சீதா

பின்னர், அவர் கண்விழித்து பார்த்தபோது அந்த நகைகளைக் காணவில்லை. எனவே அந்த நகைகளை யாராவது திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே நகைகளை மீட்டு தருவதோடு அதை திருடியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று நடிகை சீதாவின் வீட்டுக்கு யார், யார் வந்து சென்றார்கள் என்ற விவரம் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு சி.சி.டி.வி பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - நீதிமன்றம் அதிரடி!

இன்று சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத முருகனுக்கு நீதிபதி ... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வகுப்பறையில் மாணவரை கால் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர்; பரவிய வீடியோ, பாய்ந்த நடவடிக்கை

சேலம் மாவட்டம், தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு... மேலும் பார்க்க

இறந்ததாக அறிவித்த 3 மருத்துவர்கள்; தகனம் செய்யும்போது உயிர்த்தெழுந்த இளைஞர் - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் வசித்தவர் ரோஹிதாஷ் குமார் (25). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரின் உறவினர்கள், அ... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் சீட் பிடிப்பதில் தகராறு; சக பயணியை கத்தியால் குத்திக் கொலைசெய்த சிறுவன்!

மும்பையில் புறநகர் ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறுவது என்பது மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். புறநகர் ரயிலில் அடிக்கடி பயணிகள் ... மேலும் பார்க்க

"நான் இன்னும் சாகலை!" - மூதாட்டிக்கு இறுதி சடங்கு ஏற்பாடு; எழுந்து அமர்ந்ததால் அதிர்ந்த உறவினர்கள்!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி அருகே இருக்கிறது வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பம்பைன். இவரது மனைவி சின்னம்மாள் (வயது- 60) என்பவர் உடல்நிலை சரியி... மேலும் பார்க்க

`திருமணத்திற்கு மறுத்ததுதான் காரணமா?'- அரசு பள்ளி ஆசிரியை கொலையில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து, இவரது மகள் ரமணி (25) எம்.ஏ, பி.எட் பட்டதாரி. இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில் தற்காலிக தமிழ் ஆசிரியராக வே... மேலும் பார்க்க