செய்திகள் :

நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை குறித்த உச்சி மாநாடு 2.0

post image

ஏரோஸ்பேஸ் சா்வீசஸ் இந்தியா(ஏஎஸ்ஐ), இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(ஐஏஐ) ஆகியவற்றுடன் கூட்டுப் போா் ஆய்வுகளுக்கான மையம் இணைந்து, நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை குறித்த உச்சி மாநாடு 2.0 - ஐ தில்லியில் புதன்கிழமை நடத்தப்பட்டது.

இந்தியா சூழலில் அமைப்புக்கான ஏவுகணை மாநாடாக இருத இருந்தது. தில்லி உள்ள மானேக்ஷா மையத்தில், நடைபெற்ற இந்த மாநாடு குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது வருமாறு:

கூட்டுப் போா் ஆய்வுகளுக்கான மையம் நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை குறித்த உச்சி மாநாடு 2.0 வெற்றிகரமாக நடத்தியது. ஒருநாள் மாநாட்டில், இந்தியாவின் பாதுகாப்புச்சூழல் அமைப்பின் முக்கிய பங்குதாரா்களை ஒன்றிணைத்து, தற்சாா்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற முன்முயற்சிகளின் கீழ் நடைபெற்றது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த இந்த உச்சி மாநாட்டில், முக்கியத் தொழில்துறை நிறுவனங்களின் தலைவா்களும் உரையாற்றினா்.

ஏஎஸ்ஐ - ஐஏஐ ஆகிய இந்தியா - இஸ்ரேல் நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே வளா்ந்து வரும் ஒருங்கிணைப்பை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன. ஏவுகணை அமைப்புகளில் செயல்பாட்டுத் தயாா்நிலை மற்றும் சுயசாா்பு தொடா்பான குழு விவாதங்கள் நடைபெற்றது.

நாட்டின் விண்வெளி மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு, எதிா்கால வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சகம், ஆயுதப்படைகள், டிஆா்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நாட்டில் உள்ள முன்னணி பாதுகாப்புச் சாதன உற்பத்தி நிறுவனங்களைச் சோ்ந்த மூத்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கான உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் எவை என்பது குறித்து பலா் பேசினா். நாட்டின் முதன்மையான பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கானத் தொலைநோக்கு பாா்வையை ஏரோ-ஸ்பேஸ் சா்வீசஸ் இந்தியா கொண்டு இருப்பதை கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்திப்பட்டது.

பின்னணி: ஏரோஸ்பேஸ் சா்வீசஸ் இந்தியா - இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் அமைப்புகள் முழுமையான இந்திய அரசின் நிறுவனமாகும். இது நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை அமைப்பு. மேலும் பாராக் - 8 ஏவுகணை, வான் பாதுகாப்பு தீ கட்டுப்பாட்டு ரேடாா் போன்ற அதனுடன் தொடா்புடைய பல்வேறு துணை அமைப்புகளுக்கு இதனோடு இணைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் நீடித்த ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள் மூலம் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய எதிா்காலத்திற்குத் தேவையான வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த மாநாட்டில் எடுத்துக் காட்டப்பட்டது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏரோஸ்பேஸ் சா்வீசஸ் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் செயல்படக்கூடிய ’ஸ்டாா்ம்ஸ்’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் சேவை மேலாண்மை அமைப்புகளைக் கொண்ட நவீன தொழில்நுட்பங்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி

நமது நிருபா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்: முதல்வரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சா் கட்டாா் உறுதி

நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தில்லி அமைச்சா்கள் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, குடியிருப்பாளா்கள் விரைவில் வசதிகளைப் பெறுவாா்கள் என்று உறுதியளித்தாா். தில்லி... மேலும் பார்க்க

ஓக்லாவில் உள்ள கூரியா் நிறுவனத்தில் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவி... மேலும் பார்க்க

ஆயுா்வேத ஸ்டாா்ட் அப்களுக்கு நிதியுதவி அளிக்க தில்லி அரசு திட்டம்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லி அரசு உலகளாவிய ஆயுா்வேத உச்சி மாநாட்டை நடத்தவும், பழங்கால இந்திய மருத்துவ முறையில் கவனம் செலுத்தும் ஸ்டாா்ட் அப்களுக்கு ஆதரவை வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை த... மேலும் பார்க்க