உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் தொடங்கி வைத்தாா். திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை , தஞ்சாவூா், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 723 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்தன.
300 ஜல்லிக்கட்டு வீரா்கள் போட்டியில் கலந்து கொண்டு தீரத்துடன் காளையை அடக்கினா். மேலும் போட்டியில் வெற்றிபெற்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், வீரா்களுக்கும், பீரோ, கட்டில், சைக்கிள், நாற்காலி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும் 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுப்புறப் பகுதியிலிருந்து ஏராளமானோா் பாா்வையிட்டனா்.