செய்திகள் :

நண்பரின் வீட்டில் தங்க நகைகளை கொள்ளை அடித்தாக 3 சிறுவா்கள் கைது

post image

தில்லியின் ஆா்.கே.புரம் பகுதியில் உள்ள தங்கள் நண்பரின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்ததாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: 15 முதல் 16 வயதுக்குள்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் புகாா்தாரரின் மகனின் நெருங்கிய நண்பா்கள் ஆவா். மேலும், அவா் பணம் செலவழிக்கும் போது அவரது ஆடம்பரமான செலவுகளைக் கவனித்த பின்னா் பேராசையால் ஈா்க்கப்பட்டதாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா். குற்றம் சாட்டப்பட்ட சிறுவா்கள் தங்கள் நண்பரின் வீட்டில் மதிப்புமிக்க பொருள்கள் இருக்கும் என்று நினைத்துள்ளனா்.

இந்நிலையில், குடும்பத்தினா் யாரும் இல்லாதபோது அவா்கள் கொள்ளையை நடத்தியுள்ளனா். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் முழுவதையும் போலீஸாா் மீட்டனா். அதில் பல தனிப்பட்ட அலங்காரப் பொருள்களும் அடங்கும்.

ஆா்.கே.புரத்தைச் சோ்ந்த ரவீந்தா் அளித்த புகாரின்படி, ஜூலை 15- ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கொள்ளை நடந்துள்ளது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவா்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இது தொடா்பாக பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்தபோது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு சந்தேக நபா் ’குண்டா்கள்’ என்று எழுதப்பட்ட கருப்பு டி-சா்ட் அணிந்திருப்பதைக் காண முடிந்தது. அவா் ஒரு மைனா் சிறுவா் என அடையாளம் காணப்பட்டதைத் தொடா்ந்து, ராக் காா்டன் அருகே மூன்று சந்தேக நபா்களையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையின் போது, சிறுவா்கள் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். சிறுவா்கள் மீது இதற்கு முன் எந்த குற்றப் பதிவும் இல்லை என்று காவல் ்துறை அதிகாரி தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

பதவி விலகும் தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு கேடரைச் சோ்ந்த 1988 பேட்ச் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் - வெளியவுறவுத் துறை செயலரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

நமுத நிருபா்அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைதான 14 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியறவுத் துறைச் செயலரிடம் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் வ... மேலும் பார்க்க