`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!
`நமக்கே சில படங்கள் ஓடாதென தெரியும்போது, அதை செய்தால் தவறாகிடும்..!' - அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் 'கூலி' படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
'கூலி' திரைப்படத்திற்காக அனிருத்தும் இப்போது சில நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார்.

அனிருத் எப்போதுமே தான் இசையமைத்திருக்கும் படங்களின் ரிலீஸுக்கு முன்னால் அத்திரைப்படம் பற்றி டிவீட் போடுவார்.
அவர் போடும் டிவீட்டுக்கே பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.
ஆனால், அப்படியான விஷயங்களை இப்போது அனிருத் முழுமையாகத் தவிர்த்துவிட்டார். அது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியிருக்கிறார்.
அனிருத் பேசுகையில், "இப்போ டிவீட் போடுறது கிடையாது. அதை இப்போ நிறுத்திட்டேன்.
நமக்கே சில திரைப்படங்கள் ஓடாதுனு தெரியும்போது, நாம அந்த டிவீட்டைப் போட்டால் தப்பாகிடும்.
அதனால்தான் அதை நிறுத்திட்டேன். எனக்குமே அது கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்குது. 'அனிருத் இந்தப் படத்துக்கு இன்னும் டிவீட் போடலையே, ஒருவேளை படம் அப்படி இருக்குமோ'னு யோசிப்பாங்க.

அதனால்தான் நிறுத்திட்டேன். அன்னைக்கு ஒரு நாள் அந்த டிவீட்டை ஃபீல் பண்ணி போட்டுட்டேன்.
அது எனக்கு பேக்ஃபையர் ஆகிடுச்சு. ஆனால், உண்மையாகவே நான் 'கூலி' படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தேன். 'கூலி' படத்துக்கு இந்தக் காணொளி மூலமாகவே ஃபையர் எமோஜி கொடுக்கிறேன்."
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...