மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
நம்ப முடியாத சாதனையைச் செய்த எம்புரான்!
மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் ஆச்சரியப்படுத்தும் சாதனையைச் செய்துள்ளது.
பிருத்விராஜ் - மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மலையாளத்தின் முதல் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது.
லூசிஃபர் படத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கையால், எம்புரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்) தயாரிப்பாளர்களான ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இப்படத்தின் படப்பிடிப்புக்காக அதிக செலவு செய்துள்ளனர்.
இப்படம் நாளை ( மார்ச் 27) வெளியாகவுள்ளதால் கேரளத்தில் பல திரையரங்குகளில் டிக்கெட்கள் முன்பதிவு வாயிலாக விற்றுத்தீர்ந்துள்ளன.
இந்த நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எம்புரான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு வாயிலாக மட்டுமே உலகளவில் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இது, இதுவரை எந்த தென்னிந்திய சினிமாவுக்கும் நடக்காத வணிகம் என்கின்றனர்.
ஒரு மலையாளப் படத்திற்கு எப்படி இவ்வளவு பெரிய வரவேற்பு சாத்தியம் என பலமொழி திரைத்துறை நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
மேலும், எம்புரான் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றால் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலித்து விடும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை படம் மீண்டும் பார்க்கும்படி இருந்தால் நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளைச் செய்து அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற பெருமையையும் அடையும்.
இதையும் படிக்க: டூரிஸ்ட் பேமிலி வெளியீட்டுத் தேதி!