விராட் கோலியின் ஓய்வால் பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சர்வதேச சாதனை!
‘நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்கக் கோரி போராட தேமுதிக முடிவு’
நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக தேமுதிக திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஜெயசந்திரன் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் சந்தை சாலை பயணிக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.
இப்பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பல மாதங்களாகியும் பணிகள் தாமதமாகி வருகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சாலையை விரைந்து அமைக்காவிட்டால் தேமுதிக சாா்பில் மக்களளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.