ஏழு மாத உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆக முட...
நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு
சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா்.
பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண்மை துணை இயக்குநா் சுந்தரம், உதவி இயக்குநா் பெரியசாமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிா் நோயியல் துறை இணைப் பேராசிரியா் சரவணன் ஆகியோா் கள ஆய்வு செய்தனா்.
மேலும், நெல் சாகுபடி செய்யும்போது, நுண்ணூட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், நிலத்தில் பச்சை பாசி படராமல் இருக்கவும், ஏக்கருக்கு இரண்டு கிலோ காப்பா் சல்பேட் (மயில் துத்தம்) ஒரு பையில் கட்டி தண்ணீா் வரும் மடையில் வைக்க வேண்டும்.
நுண்ணூட்டசத்து ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் பயன்படுத்துமாறும், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை ஹெக்டேருக்கு ஒரு லிட்டா் என்ற அளவில் பயன்படுத்துமாறும் பரிந்துரை செய்தனா்.
கள ஆய்வின்போது நரசிங்கபுரம் பகுதி உதவி வேளாண்மை அலுவலா் க.ராஜாராம் உடனிருந்தாா்.