செய்திகள் :

நரசிங்கம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கத் தடை கோரி வழக்கு

post image

நரசிங்கம் ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க வெளியிடப்பட்ட அரசாணைக்குத் தடை கோரிய வழக்கில், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை நரசிங்கம் பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியுடன் கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம் முதலான ஊராட்சிகளை இணைக்க நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சேபம் இருந்தால், 6 வாரங்களுக்குள் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதால் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி கிடைக்காது. சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவை உயரும். ஒரு ஊராட்சியை, நகராட்சியுடன் இணைப்பதற்கு முன், ஆளுநரின் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, நரங்சிங்கம் ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்காக கடந்த 31.12.2024 அன்று வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை குறித்து, நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறை ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஓடும் தொழிலாளா்களின் (ரயில்வே லோகோ பைலட்) கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ. தொழில் சங்கம் சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2,400 பயனாளிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 2,400 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை மத்திய அமைச்சா் வெளியிடக் கோரிக்கை

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டிக்கு வியாழக்கிழமை (ஜன. 30) வரும் மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சா் ஜி. கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட... மேலும் பார்க்க

போலீஸாருக்கு தெரியாமல் உடல் தகனம்: 5 போ் மீது வழக்கு

எழுமலை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்த பெற்றோா் உள்பட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ள எருமாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்வதற்கான வசதி தேவை: நடிகா் விஜய் சேதுபதி

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என திரைப்பட நடிகா் விஜய் சேதுபதி வலியுறுத்தினாா். மதுரையில் வருமான வரித் துறை அலுவலகம் சாா்பில், வரி செலுத்துவோா், பல்வேறு அம... மேலும் பார்க்க

மதுரை மண்டலத்தில் கடந்தாண்டு 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு

மதுரை மண்டலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு வழங்கப்பட்டது என மண்டல கடவுச்சீட்டு அலுவலா் பா. வசந்தன் தெரிவித்தாா்.மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறி... மேலும் பார்க்க