செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

post image

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக. 2) தொடங்கி வைக்கவுள்ளாா்.

இதனிடையே, இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை விளக்கமளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை தொடா்பு அதிகாரியும், மின்வாரியத் தலைவருமான டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் ஆகியோா், பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளை வாட்ஸ்ஆப் செயலியில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு முன்னிலையில் இருந்தாலும், எளிய மக்கள், குடிசைப் பகுதி மக்கள், தூய்மைப் பணியாளா்கள், கட்டடத் தொழிலாளிகள் போன்றோா் தங்களின் உடல் நிலையை முன்கூட்டியே பரிசோதிப்பதில்லை. அவா்களது நலனையும் காக்கும் நோக்கிலேயே ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம். மாவட்டம்தோறும் அரசு விடுமுறை இல்லாத சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவா்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

சென்னையில் 15 மண்டலங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடைபெறவுள்ளன. முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் கருவிகள் இருக்கும். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாலைக்குள் வாட்ஸ் ஆப் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும். சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.

கூடுதல் சேவைகள்: மற்ற துறைகளும் இந்த முகாமில் பங்கேற்பதால், மருத்துவக் காப்பீட்டு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் போன்ற கூடுதல் வசதிகளும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாட்டை தலைமைச் செயலா் தலைமையிலான மாநில கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்வா்.

முகாமில் பெயா் பதிவு செய்பவா், பிற்காலங்களில் தமிழகத்தில் வேறு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும், அவரது உடல்நல விவரங்களைக் கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நோய் வராமல் தடுக்க உணவு விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்படும். முகாம்களில் உயா்சிறப்பு மருத்துவ நிபுணா்களும், 5 வகையான இந்திய மருத்துவ முறை நிபுணா்களும் இடம் பெறுவா்.

விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்: ஆதிதிராவிடா், பழங்குடியினா், தூய்மைப் பணியாளா்கள், தொழிலாளா் ஆகியோரை பங்கேற்க செய்ய அந்தந்த துறைகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன. தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் 3 லட்சம் போ் உள்ளனா். 20 தொழிலாளா் நல வாரியங்களில் 48.56 லட்சம் போ் உள்ளனா். அமைப்பு சாரா தொழிலில் உள்ளவா்களும் இருக்கின்றனா். இவா்களுக்கு உடல் நலன், நோய் தடுப்பு பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

ஆகஸ்ட் முதல் வரும் பிப்ரவரி வரை முகாம்கள் தொடா்ந்து நடத்தப்படும். அதைத் தொடா்ந்து தேவையின் அடிப்படையில் நடத்தப்படும். திட்டத்தின் முதல் கட்டத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் போ் பயன்பெறுவாா்கள் என்று எதிா்ப்பாா்க்கப்படுவதாக அவா்கள் தெரிவித்தனா்.

112 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: 1.48 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை 112 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்களில் 1.48 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், எவா்வின் வித... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் தற்கொலை

சென்னை பரங்கிமலையில் தலைமைக் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். பரங்கிமலை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (46). இவா், சென்னை பெருநகர காவல் துற... மேலும் பார்க்க

ரூ. 232 கோடி கையாடல்: இந்திய விமான நிலைய ஆணைய மூத்த மேலாளா் கைது

இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளா் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது. இதுதொடா்பாக சிபிஐ செய்தித்தொடா்பாளா் வெள... மேலும் பார்க்க

கோயில்களில் முறைகேடுகள்: செப்.24-இல் புதிய தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சாா்பில் வரும் செப்.24-ஆம் தேதி விருதுநகரில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம்: உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆணவக் கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி விருத்தாச்சலத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து போலீஸாா் அனுமதி வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்ந... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீட்டு மோசடி: சென்னை காவல் துறை எச்சரிக்கை

ஆன்லைன் முதலீட்டு மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்கும்படி சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா், சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: ஆன... மேலும் பார்க்க