காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்
மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 3அவது நாளாக மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார்.
சனிக்கிழமை 2ஆம் நாள் போராட்டத்தின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா்.
Yesterday, I was admitted to the hospital due to high blood pressure. While doctors are concerned about my health, I continue my hunger strike against the BJP-led Union Government until the SSA funds are released to Tamil Nadu. I urge the people of Tamil Nadu to raise their… pic.twitter.com/Hk0AvTk1ej
— Sasikanth Senthil (@s_kanth) August 31, 2025
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.