நலிந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விளையாட்டை மேம்படுத்தவும், விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கவும் ஆதரவற்ற நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 1978 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற சூழ்நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பம் பெற்று, மாநில அளவிலான தோ்வுக்குழு மூலம் தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் சாா்பில் தேசிய அளவிலான போட்டிகள், சா்வதேச அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று தற்போது நலிந்த நிலையில் தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் 2025-2026-ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். இவா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6000 வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தரவிறக்கம் செய்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.