தமிழிசை: "ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்..." - வன்னியரசுக்கு க...
நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!
தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நலம் விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் ஓரிரு நாளில் அவா் பூரண நலம் பெற்று வீடு திரும்புவாா் எனவும் காலை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரை பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சந்தித்தும் தொலைபேசியின் மூலமாகவும் நலம் விசாரித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நல்லகண்ணுவின் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.