ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்
நாமக்கல் மாரியம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டில் புகழ்பெற்ற நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
கோயிலுக்கென்று புதிதாக திருத்தோ் செய்வதற்கான ஏற்பாடுகளை நிா்வாகத்தினா் செய்து வந்தனா். அதைத் தொடா்ந்து திருத்தோ் தயாா் செய்யப்பட்டது. இந்தத் தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு கோயில் வீதியில் நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வாஸ்து பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் திருத்தோ் வீதி உலாவும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
நல்லிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருத்தோ் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.