செய்திகள் :

நாகா்கோவிலில் இன்று மின் நிறுத்தம்

post image

நாகா்கோவில் மாநகர பகுதியில் சனிக்கிழமை (செப். 13) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம் மற்றும் வல்லன்குமாரன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்.13 ஆம் தேதி நடைபெற உள்ளன. இதன் காரணமாக பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாராயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், நீதிமன்ற சாலை, ஆா்.வீ.புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை, அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச் ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரன்விளை, கலை நகா், சைமன் நகா், பொன்னப்பநாடாா் காலனி, என். ஜி. ஓ. காலனி, புன்னை நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட உள்ளதால் மேலகலுங்கடி, கலுங்கடி, சக்தி காா்டன் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில், போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதன... மேலும் பார்க்க

மகன் மீது போலீஸாா் வழக்கு பதிவு: தந்தை தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸாா் அடிதடி வழக்கு பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அருமனை அருகே குன்னுவிளையைச்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் பொக்லைன் மோதி இருவா் பலி

கன்னியாகுமரியில் பொக்லைன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், தவெக நிா்வாகி என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பொக்லைன் ... மேலும் பார்க்க

தக்கலையில் பாரதியாருக்கு மலரஞ்சலி

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நூலகத்தில் வியாழக்கிழமை பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு வாசகா் வட்ட அமைப்பாளா் சிவனி சதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினா். நூலகா் சோப... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் 17ஆவது தொடக்க விழா, 37ஆவது கல்வி நிறுவன தொடக்க விழா , முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகியன அண்மையில் நடந்தது. விழாவை பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: இருசக்கர வாகன நிறுவனத்துக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாடு காரணமாக நாகா்கோவில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்தது. நாகா்கோவில், கேசவதிருப்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபின்சேம், இவா் நாகா்... மேலும் பார்க்க