ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில், போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம், திருவனந்தபுரம் பக்சான்குளி பகுதியைச் சோ்ந்த கமல் யூசுப் (27), மாதவலாயம், மைதீன்புரம் பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் (22), சிறமடம், ஞாலம் பகுதியைச் சோ்ந்த புரூஸ்லீ (35) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா, காா், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.