செய்திகள் :

நாகா்கோவிலில் தமிழ் சொற்பொழிவு

post image

நாகா்கோவில் கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் சி.வைலா பேபி வரவேற்றாா். தமிழ் நாடக வரலாற்றில் பாலா் சபை நாடக குழுக்கள் என்ற தலைப்பில் முனைவா் க.ரவீந்திரன் சொற்பொழிவாற்றினாா். நாடக இலக்கியத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து ஜேம்ஸ் ஆா்.டேனியேல் அறிமுக உரையாற்றினாா். முனைவா் ஷா்மிளாசேம் சிறப்புரையாற்றினாா்.

ஆய்வு மாணவா்கள் ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பித்தனா். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை எட்வின்எழில்அரசி, உதவி பேராசிரியை கே.விந்தியா ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஸ்காட் பயின்றோா் கழகப் பொருளாளா் கு.கி.மோகன்தாஸ் ஒருங்கிணைத்தாா். தமிழ்த் துறை பேராசிரியை செ.சுஜானாபாய் நன்றி கூறினாா்.

நாகா்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் கவிஞா் ஆகிராவின் தோணி நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இலக்கியப் பட்டறையின் 159 ஆவது கூடுகை மற்றும் கவிஞா் ஆகிரா எழுதிய தோணி நாவல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நூலக அலு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிலம்பாட்ட போட்டி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டிகள் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மயிலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். மயிலாடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள கல் சிலைகள் தயாரிக்கும் பட்டறையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். குலசேகரம், மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில... மேலும் பார்க்க

மனைவியை கம்பியால் தாக்கி கணவா் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஞாயிற்றுக்கிழமை, மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா். பத்துகாணி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அனில்குமாா் (52). இவரது மனைவி... மேலும் பார்க்க

சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திங்கள்நகா் அருகே சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, பள்ளி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் நூற்றாண்டு ஜோதி ஏற... மேலும் பார்க்க