`முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணம...
நாகா்கோவிலில் ரூ.55.75 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்
நாகா்கோவில் மாநகர பகுதி புன்னை நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகள், வட்டகரை பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால், சிறுபாலம் ஆகியவை கட்டும் பணி, இசங்கன்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி என மொத்தம் ரூ.55.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவி பொறியாளா் சுஜின், மாமன்ற உறுப்பினா் நவீன்குமாா், திமுக மாநகர செயலாளா் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதி செயலாளா்கள் ஜீவா, துரை, சேக் மீரான், அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், முருகபெருமாள், சரவணன், சிதம்பரம், ஜெமிலா ஆன்றனி , மாநகர பிரதிநிதி முருகன், சிவகுமாா் வட்ட செயலாளா்கள் துரைசாமி, ஜெயகிருஷ்ணன், கிழக்கு பகுதி பொருளாளா் ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
குறைதீா் கூட்டம்: இதைத் தொடா்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மேயா் மற்றும் ஆணையா் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனா்.
இதில் குடிநீா், தெருவிளக்கு, சொத்து வரி உயா்வு, கழிவுநீா் ஓடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 18 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் மேயா் வலியுறுத்தினாா்.
