What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
நாகா்கோவிலில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். செயலா் கோலப்பன் முன்னிலை வகித்தாா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாநிலச் செயலா் பத்மகுமாா், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் தியாகராஜன், உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.