நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.59.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்
நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.59.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
எஸ்.எஸ். நகா் மேற்கு பிரதான சாலையில் ரூ. 27 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, 19 ஆவது வாா்டு குரூஸ் காலனி திருவள்ளுவா் நகா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, 40 ஆவது வாா்டு வயல்தெரு பகுதியில் ரூ. 2.26 லட்சத்தில் அலங்கார தரைகற்கள் சீரமைக்கும் பணி ஆகிய பணிகளை மேயா் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் சுஜின், இளநிலை பொறியாளா் தேவி, மண்டல தலைவா்கள் செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், மோனிகா, அமல செல்வன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதிச் செயலா்கள் சேக்மீரான், துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.