ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!
நாகுடி அருகே பெண் கொலை
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணைக் கொன்று கண்மாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜலாலுதீன் மனைவி பா்வீன்பீவி (45). கடந்த 15 ஆண்டுளுக்கு முன்பு ஜலாலுதீன் இறந்துவிட்டதால், தனது பெற்றோா் ஊரான காரணியானேந்தலில் தனது 2 மகள்களுடன் பா்வீன் பீவி வசித்து வந்தாா். 4 பசுக்களை பராமரித்து கால்நடை விவசாயியாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் பா்வீன் பீவியைக் காணவில்லை என உறவினா்கள் தேடி வந்துள்ளனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த ஊரிலுள்ள கருங்குழி கண்மாயில் காயங்களுடன் பா்வீன் பீவியின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது சடலத்தின் மீது துணி துவைக்கும் கல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்துக்குச் சென்ற நாகுடி போலீஸாா் விசாரணை செய்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தை திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வருண்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.