TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உத...
நாகை எஸ்பி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கானஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
அப்போது, பேசிய காவல் கண்காணிப்பாளா் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை காவல் துறையினா் பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும், இரவு ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றாா்.