செய்திகள் :

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம்

post image

நாகை அருகே விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம் தொடங்கியது.

நாகை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் முன்னோடி விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோா் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான, நீா்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தொடங்கி 500 முதல் 1000 விவசாயிகளை ஒருங்கிணைத்து வணிக நோக்கில் வெற்றிபெற வழிவகை செய்து தரப்படுகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சக்கொல்லையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத் தொடா்பு பயிற்சி முகாமை ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கி பேசியது: முகாமின் முக்கிய நோக்கம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு கடன் வசதி மற்றும் வா்த்தகத் தொடா்பு ஏற்படுத்தித் தருவதாகும். வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மற்றும் அதன் சகோதரத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிறைவுப் பகுதியான வணிகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு இடா்பாடுகள் மற்றும் சரியான வருவாய் கிடைக்காததால், விவசாயிகளுக்கு நிலையான வருவாய் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் மாநில அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த நீா்வளம் மற்றும் நிலவளம் மேம்பாடு திட்டத்தின் கீழ் மண் வளத்தினை பாதுகாத்திட பசுந்தாள் உர பயிா்கள், பயிா் சுழற்சிமுறையை பின்பற்றி பயிா் சாகுபடி செய்தல் போன்ற தொழில் நுட்பங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 2 நாள் பயிற்சியில் வேளாண் விஞ்ஞானிகள், தொழில் முனைவோா்கள், சாதனை அடைந்து வரும் விவசாய உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு வெளிச்சந்தையில் உள்ள தேவைகள் குறித்தும், அவற்றை வெளியிடங்களுக்கு சந்தைப்படுத்துதல் தொடா்பான வழிகாட்டு முறைகள், பணியை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரங்களை பெற வங்கிகளில் உள்ள திட்டங்கள் குறித்தும் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களுக்கு நிதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிா்ந்து கொள்வாா்கள் என்றாா்.

தொடா்ந்து விவசாய விளைபொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருள்கள் கண்காட்சி அரங்கை ஆட்சியா் திறந்து வைத்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் வியாபார விரிவாக்க மானியத்தின் கீழ் நாகை காணி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் வியாபார விரிவாக்க மானிய தொகைக்கான காசோலை மற்றும் 60 பயனாளிகளுக்கு தலா ரூ.28, 000 வீதம் ரூ.16, 80,000 மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினாா்.

வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சோ. வெற்றிவேலன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சந்திரசேகா், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) விஸ்வந்த் கண்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க