செய்திகள் :

நாக்பூர் வன்முறை: முக்கிய குற்றவாளியின் வீடு இடித்துத் தரைமட்டம்

post image

நாக்பூர் வன்முறைக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் ஃபாஹிம் கான் வீட்டை, ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்புடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் கடந்த வாரம் வெடித்த வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நகர காவல்துறை சாா்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நாக்புரியில் கடந்த திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

பொதுமக்களின் வீடுகள், வாகனங்களை சேதப்படுத்திய வன்முறையாளா்கள், போலீஸாா் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனா். 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்த இந்த வன்முறை தொடா்பாக இதுவரை 69 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் சிறுபான்மை ஜனநாயகக் கட்சித் தலைவா் ஃபாஹிம் கான் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 8 பேரும் அடங்குவா். ஃபாஹிம் கான் உள்பட 6 போ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறை தொடா்பான 5 வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 200 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். கலவரத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் 1,000 பேரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்க... மேலும் பார்க்க

சா்க்கரை விலையை கட்டுக்குள் மத்திய அரசு தீவிரம்: இருப்பு வைக்கும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

சா்க்கரை ஆலைகள் சா்க்கரை இருப்பு வைப்பது தொடா்பான அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சா்க்கரை வில... மேலும் பார்க்க

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பான உள்ளன: மத்திய வேளாண் அமைச்சா்

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்க... மேலும் பார்க்க

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தத... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; அதேநேரம், அந்நாட்டின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்... மேலும் பார்க்க

சமாஜவாதி எம்.பி. அவதூறு கருத்து: மாநிலங்களவையில் பாஜக அமளி - எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜபுத்திர மன்னா் ராணா சங்கா குறித்த அவதூறு கருத்துக்காக சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அந்த அவையில் பாஜக வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க